பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் -65


இதே கருத்தை,

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
(திருவாச. 327)

என்று பின்னரும் பாடியுள்ளமை காண்க.

43.

ஓய்வு இலாதன உவமனில் இறந்தன
       ஒண்மலர்த் தாள்தந்து
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும்
       என்னைத் நல் நெறி காட்டி
தாயில் ஆகிய இன் அருள் புரிந்தஎன்
        தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்
        செழும்கடல் புகுவேனே 39

ஓய்வு-அழிவு. உவமனிலிறந்தன-உவமான உவமேயங்களுள் உவமேயத்தைக் காட்டிலும் உவமானம் தன்மையால் விஞ்சியிருக்கும்; அங்ஙனமாகவும் திருவடியாகிய உவமேயம் உவமானங்களைக் காட்டிலும் சிறந்துள்ளதென்பதாம்.

பிரபஞ்சத்தில் படைக்கப்பெற்ற உயிர்கள் அனைத்தும் உய்கதியை நாடி அவன் திருவடிகளில் ஓயாது வந்து வீழ்கின்றன. அங்ஙனம் வீழும் உயிர்களை ஒய்வு ஒழிவின்றிக் காத்து அருள் செய்தலின் அத்திருவடிகளை 'ஓய்விலாதன' என்றார்.

'ஒண்மலர்த் தாள்’ என்று கூறவந்த அடிகளார் அச்சொல்லுக்கு முன்னர் 'உவமனில் இறந்தன' என்று கூறுவதை நோக்க வேண்டும். தாளுக்கு ஒண்மலர் உவமையாக நின்றது. மலர் என்று தவறியவுடன் மொக்கு விரிதல், மலர்தல், கூம்புதல், வீழ்தல் ஆகிய இயல்புகள் நம் மனத்திடைத் தோன்றுமன்றே? அதனைப் போக்குவதற்காக 'உவமனில் இறந்தன' என்ற சொற்களை முன்னர்ப்பெய்கின்றார். அத்திருவடிகள் எப்பொருளோடும்