பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


உடுத்தி இருக்கின்றார்; எனினும் இவை இரண்டும் தேவையற்ற செயல்கள் என்று கருதிப் பேசுகின்றார்.

முதல் இரண்டு அடிகளில் வரும் கருத்து, திருவருள் பெறுவதற்கு முன்னர் அமைச்சராக இருந்த காலத்தில் நிகழ்ந்தவைபற்றி இருக்கலாம்.

இங்குமட்டுமன்றி 'வெஞ்சேல் அனைய கண்ணார் தம்' (திருவாச: 427) என்று தொடங்கும் பாடலிலும் இதே கருத்துப் பேசப்பெறுதலின் அடிகளாரின் பழைய வாழ்க்கையைக் குறித்தது என்றோ, ஆன்மாக்களின் பொதுவான இயல்பை ஏறட்டுக் கொண்டு பாடியது என்றோ பொருள் கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

கைம்மாறு கொடுத்தல்

45.

இரு கை யானையை ஒத்து இருந்து என் உளக்
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே 41

இருகை யானை ஒத்திருந்தேன்-ஒருகையால் உண்டு போதாமையால் இருகையால் உண்ட யானையை ஒத்தேன். உள்ளம்-ஆன்மா. எவ்வம்-துன்பம். கிற்றிலேன்-ஆற்றலில்லேன். (உண்ணவே) கிற்பன்-வல்லேன்.

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்த குருநாதர் வழியோடு சென்ற தம்மை வருக எனப் பணித்து ஆட்கொண்டார். அந்த நேரத்தில் குருவாக அமர்ந்து இருந்தவர் சிவன்தான் என்பதைத் தாமே தேறி அறிந்து கொண்டதாக அடிகளாரே முன்னர்க் கூறியுள்ளார்.

அப்படியிருக்க என் ‘உள்ளக் கருவை யான் கண்டிலேன்’ என்ற இத்தொடர் ஒரு புதிய சிந்தனையைத்