பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வைப்புநிதியாக உள்ளான். காரணம் இவர்கள் மேலே கூறிய மூன்று உலகத்தார்க்கும் மேம்பட்டவர்கள் ஆதலாலும் இறைவன் ஆணையைப் பெற்று, படைத்தல் காத்தல் ஆகிய தொழில்களைச் செய்கின்றவர்கள் ஆதலாலும், அரிதின் முயன்று தவம் செய்து இப்பதவியைப் பெற்றவர்கள் ஆதலாலும் அயன் மால் ஆகிய இவர்களுடைய வைப்பு என்றார். 254. குலம் பாடிக் கொக்கு இறகும் பாடிக் கோல் வளையாள் நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்தோறும் அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ 20 குலம்-சிறப்பு. கொக்கு இறகு-கொக்குவடிவமான அசுரனைக் கொன்று இறைவன் சூடிய இறகு. அலம்பு ஆர்புனல்-அசைகின்ற நிறைந்த நீர். இப்பாடலில் குலம் என்று குறிக்கப்பெற்றது. வாழையடி வாழையாக வரும் அடியார் கூட்டத்தை ஆகும். அத்தகையோருடைய பக்தி மிகுதியும் உறைப்புடைய தாகலின் அவர்களுடைய கூட்டத்தைப் பாடி என்றார். இறைவன் தலையில் அணிந்திருப்பது கொக்கிறகு. கோல்வளையாள் என்பது அழகிய வேலைப்பாடமைந்த வளையினை அணிந்த இறைவியைக் குறிப்பதாகும். மிக உயர்ந்ததாகிய மானிடப் பிறப்பெடுத்து அதிலும் சலனப்படாத இறை பக்தியில் மூழ்கியவர்கள் திருக் கூட்டத்தைக் குலம் பாடி' என்று குறித்துவிட்டு, அஃறிணையாகவும் தனக்கென்று ஒரு தனித்தன்மை இல்லாததாகவும் உள்ள கொக்கிற'கை அடுத்துக் கூறியது நோக்கற்குரியது. மிகச் சாதாரண கொக்கிறகு இறைவன் தலைமேல் ஏறிய காரணத்தால் அடியார்களோடு ஒப்ப வைத்து எண்ணும் சிறப்புடையதாயிற்று என்றவாறு. ওঁ ওঁ ওঁঠ