பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வினாவை முடிக்கும் நிலையை மனத்துள் கொண்டு வரவேண்டும். எதிரே உள்ளவள் மிக எளிதாக அந்த வினாவிற்கு விடைகூறும்முகத்தான் விடை கூறிவிட்டதால் தன் கைகளை உயர்த்தி சாழல்’ என்ற சொல்லுடன் வெற்றி தனக்கே என்பதைப் பிறர் காண நிரூபிக்கின்றாள். இருவருடைய கைகளும் துளக்கப்பட்டிருப்பதால் காணேடி, சாழல் என்ற இரண்டிற்கும் உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று படுமாறு தட்டி ஓசை எழுப்பி விளையாடினர் என்று நினைப்பதில் தவறில்லை. சாழல் முதலிய விளையாட்டுக்கள் தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, மதுரை மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் விளையாடப்படுவதைத் தாம் அறிந்திருந்ததாக முனைவர். எம். சண்முகம்பிள்ளை அவர்கள், தம்மிடம் கூறினார் என்று, டாக்டர் யோகம் (Dr. Yocum) தாம் எழுதிய ஆடவல்லானுக்கு உரிய பக்திப் பாடல்கள் ("Hymns to the Dancing Siva')' orcăsp orgödi) &sjägjørøITsr. எந்த ஒன்றிற்கும் இரண்டு வகை நோக்கங்களைக் கற்பிக்கலாம். சிவபெருமானைப்பற்றிக்கூட ஓரளவு எள்ளி நகையாடும் முகமாக, அவன் கோலம் இருந்தவாறு என்னே! அவன் செயல் செய்தவாறு என்னே! என்ற வினாக்களை எழுப்பி, தங்கள் வினாவிற்கு எதிரே உள்ளவள் விடைகூற முடியாது என்ற எக்களிப்புடன், காணேடீ, என்னேடி, இயம்பேடி முதலிய சொற்களினால் தங்கள் எள்ளலை வெளிப்படுத்துகின்றனர். எதிரே உள்ளவள் ‘புறத்தே காணப்படும் சிலவற்றை வைத்துக்கொண்டு, இவன் எப்படித் தலைவனான வான்' என்று வினவுகிறீர்களே, உங்கள் அறியாமை இருந்தவாறு என்னே! உலகம் முழுவதையும் படைத்துக் காத்து அழிக்கின்ற ஒருவன்-இயல்பாகவே தலைவனாகவுள்ள ஒருவன்-தோலை அணிந்தால் என்ன ? பட்டாடை அணிந்தால் என்ன? அரண்மனையில் வாழ்ந்தாலென்ன?