பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 113 எதனையும் ஊடுருவிக் காணும் ஞானக் கண்ணாகும். பெருந்தவறு நேர்ந்துழி அது எரிக்கவும் செய்யும். அயன், ஐந்து தலையுடை மையின் செருக்குக் கொண்டான்' அனங்கன், தேவர்கள் சொல்லைக் கேட்டு இறைவனின் மோனத்தைக் கலைத்தான் அந்தகன் இயமன்), யார் இவர் என்று பாராமல் மார்க்கண்டேயன் யாரிடம் அடைக்கலம் புகுந்துள்ளான் என்பதைப் பற்றிச் சிந்தியாமல், அகந்தை காரணமாகத் தன் அதிகார எல்லையைக் கடந்தான். சந்திரன் அவிபுணவிற்கு ஆசைப்பட்டு இறைவனை மதிக்காத தக்கன் வேள்வியில் பங்குகொண்டான். இவர்கள் நால்வரில் ஒருவனுக்குச் செருக்கு, மற்றவனுக்குச் சொந்தப் புத்தியில்லாமல் பிறர் சொல்லைக் கேட்கும் அறிவினம், இன்னொரு வனுக்குக் கடமை என்ற பெயரில் எல்லை மீறிய அகந்தை, நான்காமவனுக்கு உணவின்மேற் கொண்ட பேராசை ஆகியவை இருந்தன. எங்கள் தலைவன் இவர்களைத் தண்டித்தானே தவிரக் கொல்லவில்லை என்பதை நீ அறிதல் வேண்டும். இவர்கள் அனைவருக்கும் தந்தையாக இருக்கும் தலைவன், இவர்களைத் தண்டித்து, குற்றங்களிலிருந்து நீங்குமாறு செய்தது அவர்கள் பெற்ற வரமென்றே கருத வேண்டும். மக்களைத் தண்டித்தல் தந்தையின் கடமையாதலால் அதனால் அவருக்கு வசையில்லை. 259. தக்கனையும் எச்சனையும் தலை அறுத்து தேவர் கணம் தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்ததுதான் என் எடி தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து அங்கு எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன்,காண் சுழலோ 5