பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 117 விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய் (சிலப்பதி:12-முன்றிலின் சிறப்பு-21) 263. தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன் பெண் பால் உகந்தான் பெரும் பித்தன் காண் ஏடி பெண் பால் உகந்திலனேல் பேதாய் இரு நிலத்தோர் விண்பால் யோகு எய்தி விடுவர் காண் சாழலோ 9 உகந்தான்-விரும்பினான். இருநிலத்தோர்-மக்கள். யோகு எய்தியோகமார்க்கத்தில் சென்று. விடுவர்-அழிவர். தோழி: தென் திசை நோக்கி ஆடும் ஒருவன் ஒரு பக்கத்தில் பெண்ணை விரும்பி வைத்திருப்பது பொருத்தமோ? அவளை விரும்பி வைத்திருப்பது பெண்மாட்டுக் கொண்ட பெரும்பித்து அன்றோ?. தலைவி. அவன் பெண்ணை ஏற்றுக்கொண்டிராவிடின் உலகத்து உயிர்களெல்லாம் துறவு மேற் கொண்டு யோகத்தில் புகுவராதலின், உலகம் வளராது. ஆடிக்கொண்டேயிருக்கும் ஒருவன் பெண்ணை நயந்தான் என்று சொல்வது சற்றுப் பொருந்தாக் கூற்றே யாகும். ஆடாமல் இருக்கும்போது அவன் சக்தி வெளிப் படாது ஆதலின் அவனை யோகி என்பர். அவனுள் இருக்கும் சக்தி வெளிப்பட, அதனைப் பயன்படுத்திப் பணிபுரியும்போது அவனைப் போகி என்பர். சக்தி இல்வழி வளர்ச்சி இல்லை; ஆதலின் இதனைக் குறிப்பால் உணர்த்தச் 'சிற்றம்பலவன் பெண்பால் உகந்தான்' என்று அடிகளார் கூறுகிறார்.