பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 123 சிறப்புகள் அவனிடம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். தலைவனுக்குரிய சிறப்புகள் இல்லாதபோது அவனைத் தலைவனாக் ஏற்பது எவ்வாறு என்பதே வினா.) தலைவி தோழி! உன்னுடைய ஐயம் தேவையற்றது. ஏனென்றால், தெய்வங்களுள் உயர்ந்தவர்கள் என்று கருதப்பெறும் நாரணனும் நான்முகனும் தேவர்கள் தலைவனாகிய இந்திரனும் இத் தலைவனுக்கு வழிவழியாக வரும் அடியார்கள் (வழியடியார்) என்றால், மற்றவர்களைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. 267. மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை உலகு அறிய தி வேட்டான் என்னும் அது என் ஏடீ உலகு அறிய தி வேளாது ஒழிந்தனனேல் உலகு அனைத்தும் கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ 13 வேட்டான்-மணந்தான். கலை நவின்ற பொருள்கள்-கலைகளை விரித்த நூல்கள். மிகப் பழைய நாகரிகம் உடைய தமிழரின் கடவுட் கொள்கையில் உள்ள தனிச்சிறப்பு இங்கே பேசப்பெறு கிறது. சமணம், பெளத்தம் ஆகியவை நீங்க உலகிடைக் காணப்பெறும் ஏனைய சமயங்கள் அனைத்தும் கடவுள் பற்றிப் பேசுகின்றன. ஆனாலும், அச்சமயக் கடவுளர் யாரும் ஆண், பெண், வடிவாகப் பேசப்பெறுவதில்லை.