பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஏகம் சத் என்று கூறும் வேதத்தில் இந்திரன் தெய்வமாகக் கருதப்படுகிறானே தவிர அங்கேயும் பெண்மைக்குத் தனியிடம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப் பழைய சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரையுள்ள இலக்கியங்கள் அனைத்தும் சிவன் என்று சொல்லும்போது உமையையும், நாரணன் என்று சொல்லும்போது திருமகளையும் சேர்த்தே பேசுகின்றன. இவ்வாறு கூறும்பொழுதேகூட உமையொரு பாகன், திருவுறை மார்பன் என்று சக்தியோடு சேர்த்தே சிவன், நாரணன் என்ற இருவருடைய பெயரும் வழங்கப் பெறுதலைக் காணலாம். தோழி: தலைவி! நீ சொல்லும் தலைவன் பிரபஞ்ச காரணன் என்றால், அவனால் படைக்கப்பட்ட மக்கள் செய்வதைப் போன்றே தலைவனாகிய அவனும் செய்வது எவ்வாறு பொருந்தும்? மலையரசன் பாவையாகிய உமாதேவியை, உலகில் வாழ்கின்ற முனிவர்களும் காணும்படி, அக்கினி சாட்சியாக மணந்தான் என்பது எவ்வாறு பொருந்தும்? தலைவி தோழி! ஏனையோரைப் போல ஒரு பெண்ணை மணந்து இல்லறம் நடத்துவதற்காக அவன் இதனைச் செய்துகொள்ளவில்லை. உலகில் தோன்றிய கலைஞானங்கள் அனைத்தும் எல்லாப் பொருள்களையும் இரட்டையாகவே கண்டன. ஒன்றுக்கொன்று மாறுபட்ட இயல்புடைய இரண்டு பொருள்கள் சேரும் போதுதான் ஒரு புதிய பொருள் தோன்றுகிறது. பொருள் ஒன்றாகவே இருந்துவிட்டால் அதனுள் இருக்கும் சக்தி வெளிப்பட்டு