பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 133 நினைத்திருக்கலாம். அப்படி நினைத்தவர் களுக்குப் பொருளும் இன்பமும்கூட வீடுபேற்றை அடைய உதவுவனவாகும் என்பதை வனத்திடை வாழும் முனிவர்களும் அறிந்துகொள்வதற்காக, அறம் முதல் நான்கினையும் விரித்துரைத்தான். அவ்வாறு அவன் உரைத்திராவிடின், வனத்திடை வாழும் அம் முனிவர்கள் துறவறமும், தனி வாழ்க்கையுமே வீடுபேற்றை அடைய ஒரே வழி என்ற தவறான முடிவிற்கு வந்திருக்கலாம் அல்லவா? பெளத்தம், சமணம் என்ற சமயக் கொள்கைகளும் அவற்றோடு சேர்ந்த புறத்துறவு என்ற கொள்கையும் தமிழ்நாட்டில் தோன்றாமல், வடக்கே இருந்து வந்தவை களாகும். என்ன காரணத்தாலோ தமிழ்நாட்டில் அவை ஒரளவு வலுப் பெறலாயின். ஆதி சங்கரர் துறவியாக இருந்தமையால் அவரைப் பின்பற்றிய அத்வைதிகளும் துறவைப் பெரிதாக மதித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் புறத்துறவு வீடுபேற்றுக்குரிய ஒரே வழி என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றியது. அடிகளார் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டில் பெளத்தமும், சமணமும் வலுவிழந்தாலும் சங்கரரின் அத்வைதம் வலுப்பெற்று நின்றது. அந்தக் கால கட்டத்தில் தோன்றிய அடிகளார், 'அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான்' (திருவாச:270) என்று பாடிய பின்னர் அன்று பரவியிருந்த புறத்துறவை மட்டும் இது குறித்துவிடுமோ என்று எண்ணினார்போலும், புறத்துறவு ஒன்றுமட்டுமே வீடுபேற்றுக்குரிய வழியாகும் என்று கருதியவர்கள் புருடார்த்தங்கள் எனப்படும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கிற்கும் மதிப்புத் தரவில்லை. காரணம், இந்த நான்கினிடையே பொருளும், இன்பமும் இடம்பெற்றிருந்தமையே ஆகும். பொருளையும்