பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி 145 இப்படி மூன்று நிலைகளிலும் இருக்கின்ற ஒருவனை நம்மால் பார்க்கவோ, அறியவோ முடியாது என்பது ஒரு புறம் இருக்க, ஒரளவு உணர்தல்கூட கடினம் என்கிறார் அடிகளார். இக்கருத்தையே 'உரு மூன்றுமாகி உணர்வரிதாம் ஒருவனுமே” என்ற தொடர் குறிப்பிடுகிறது. இப்பாடலின் மூன்றாவது அடியோடு நம்மாழ்வாரின் 'உளன் எனின் உளன் அவன் (நாலா, 2090) என்ற பாடல் ஒப்ப வைத்துச் சிந்திக்கத் தக்கதாகும். 281. வணங்கத் தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து இணங்கத் தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான் அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணம் கூரப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ 7 உலகிடைப் பிறந்த மனிதர் யாவர்க்கும் மனம், மொழி, மெய், என்ற மூன்றும் உண்டு. இந்த மூன்றும் ஒன்றாக இணைந்து தொழிற்படும்போது பெரும்பயனை விளைவிக் கின்றன. ஆனால் இவை மூன்றும் ஒரே பணியில் ஈடுபடு தல் ஏறத்தாழ இயலாத காரியம். அப்படியானால் மனிதன் தன் முயற்சியால் இதனைச் செய்தல் இயலாத காரியம் என்பதை அறிந்து, இறையருளைத் துணைக்கு அழைத்துக் கொண்டால் இது நடைபெறும் என்க. இதே கருத்தைத் தான் நாவரசர் பெருமானும் வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை' (திருமுறை: 5-90-7) என்று கூறுகிறார். அடிகளார் காலத்தில் சமுதாயம் வளர்ந்துவிட்டது. அதற்கேற்ப நாகரிகமும் வளர்ந்துவிட்டது. புற வளர்ச்சி காரணமாக அகவளர்ச்சி குன்றிவிட்டது. இறையுணர்வு மிக்கவர்களைக் காணுதலே கடினமான காலம் ஆகும் அது. இன்னும் கூறவேண்டுமானால், திருவாசகம் பாடும் ஒருவரைக்கூட.ப் பித்தர் என்று கூறும் மக்கள் நிறைந்த