பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி 147 ஆகம்-உடல். துன்னவைத்த-சேரவைத்த, இறைத் தொண்டு, மக்கள் தொண்டு ஆகியவற்றுள் எதனை ஒருவர் மேற்கொண்டாலும் அதனை விடாமல் தொடர்ந்து செய்தல் கடினமாகும். இது மனித மனத்தின் இயல்பு. இவ்வாறு நிகழாமல் இருக்கவேண்டுமானால் இப் பணிக்கு இறையருள் துணைநிற்க வேண்டும். இக் கருத்தையே பன்னாள் பணி செய்ய அவன் திருவடிகளை என் நெஞ்சத்தில் நிலை நிறுத்தினான் என்கிறார். 284. பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அறப் பெருந்துறையான் சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான் கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி போர் ஆர் புரம் பாடிப் பூவல்லி கொய்யாமோ 10 பிண்டம்-உடல். கார் ஆர்-கருமைநிறம் பொருந்திய. திருப்பெருந்துறையான் வாதவூரரின் தலைமேல் திருவடி பதித்தவுடன் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒரே விநாடியில் அடுத்தடுத்து நிகழலாயின. உதாரணமாக, எல்லையற்ற ஆனந்தம் உண்டாயிற்று. திருவாதவூரர் மறைந்து மணிவாசகர் தோன்றக் காரண மாயிற்று. இந்த பூத உடம்பில்கூட அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏறின. இவற்றை யல்லாமல் மற்றொன்றும் நிகழ்ந்தது என்கிறார் அடிகளார். மனிதன் இவ்வுடலோடு வாழ்கின்றவரையில் அவன் மனத்துள் நிறைந்திருப்பது ஆசையாகும். மனிதனுக்கு இயல்பாக இருக்கவேண்டிய அளவோடு இந்த ஆசை இருந்திருக்குமாயின் மிக நல்ல காரியங்களை அவன் செய்திருத்தல் கூடும். ஆனால், ஆசை என்ற விதை மனத்தில் பதிந்தவுடன் ஒரே விநாடியில் அது பெருமரமாகி ஆலமரம்போல் தன் கிளைகளை