பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இந்த உலகிடை வாழ்ந்த முனியுங்கவர்கள் ஆகிய அனைவரும் தண்டிக்கப்பட்டனர். ஏன் ? தன் பெண்ணைச் சிவனுக்கே மணமுடித்தாலும் தான், மருமகனைவிட மேம்பட்டவன் என்ற அகங்காரம் தக்கனுடைய தலையில் புகுந்தது. ஆகவே, சிவபெருமானை ஏசினான் அவன். அகங்காரத்தின் விளைவால் ஏற்பட்ட இந்த ஏசலை மறுத்துக் கூறாமையால் தேவர் முனியுங்கவர்கள் முதலியோர் உடன் குற்றவாளிகள் ஆயினர். ஆணவத்திலிருந்து விடுபடாமையால் தக்கனும், அவனுடைய யாகத்தில் கிடைக்கும் அவி உணவிற்கு ஆசைப்பட்டு யாகத்திற்கு வந்த தேவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆவர். சுயமாகச் சிந்தித்து எது மெய், எது பொய் என்று அறியவேண்டிய அறிவு, தலையினிடத்து உள்ள மூளையின் பாற்பட்டதாகும். அந்த மூளை மீளமுடியாதபடி தவறான வழியில் நீண்ட தூரம் சென்றுவிட்டமையின் அந்தத் தலை அறுபட்டது. தனக்கென்று ஒரு சிந்தனை இல்லாமல் பிறர் செல்லும் வழியில் செல்லும் ஆட்டுக்கடாவின் தலை தக்கனுக்கு வழங்கப்பட்டது. இவ்விரண்டினிடையே 2.ஸ்ள வேறுபாட்டை உணர்த்தவே அடிகளார். இவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் அடுத்தடுத்துப் பாடுகிறார். திருவாசகம் போன்ற ஞானநூல்கள் பின்னர் வாப் போகின்ற சமுதாயத்திற்குப் பலகாலம் நின்று வழிகாட். வேண்டியமையின் பாடல்களின் எண்ணிக்கையில்கூட