பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பல்லவர்களுடைய தலைநகராக இருந்தமைக்காகக் கச்சி, புகழப்படவில்லை. கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, காஞ்சியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் நூற்றுக்கணக்கான புத்தப்பள்ளிகள் இருந்து கல்வியைப் பரப்பிவந்தன. கிறிஸ்து பிறப்பதற்கு இரு நூற்றாண்டுகள் முன்னர் மிகப் பிரசித்தியுடன் பீகாரில் திகழ்ந்த நாலந்தா பல்கலைக் கழகத்திற்குத் துணை வேந்தராக ஒரு தமிழரும், பேராசிரியராக ஒரு தமிழரும் காஞ்சியிலிருந்து சென்றனர் என்பதை நினைக்கும்போது நாவரசர் பாடியது முற்றிலும் உண்மை என்பது விளங்கும். இன்று புத்த சமயத்தின் முடிமணியாகத் திகழும் சென் Liškolb (Zen Buddhism) orgârgy வழங்கப்படும் தியான பெளத்தத்தைச் சீன நாட்டில் புதிதாக நிறுவியவர், காஞ்சி புரத்தில் இருந்து சென்ற தர்மபாலர் என்ற தமிழராவார். எனவே, தேசமெல்லாம் புகழ்ந்து ஆடும் கொண்டாடும்) கச்சி என்று கூறியது முற்றிலும் பொருத்தமுடையது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அத்துணைச் சிறப்புடைய கச்சியிலுள்ள திரு ஏகம்பன் கோயிலைப் பாடினால் என்ன நிகழும் என்பதை அடிகளார் அடுத்துக் கூறுகிறார். திரு ஏகம்பன் கோயிலைப் பாடினால் நீக்க முடியாத பாச வினையை அலட்சியமாக வேரொடு பறித்து எறியும் ஆற்றல் நம்பால் வரும் என்கிறார் பெருமான். ஏகம்பன் கோயில் பாடுதல் என்ற செயலில் பாசவினையைப் பறித்தெறியும் ஆற்றல் பிறக்கின்றது. அந்த மனநிலையுடன் பொற்சுண்ணம் இடிக்கலாம் என்கிறார். வினை பறிக்கப்பட்டபின் தோன்றும் எக்களிப்பில் நிறைந்த மனத்துடன் இறைவன் புகழைப் பாடிக்கொண்டே பொற்சுண்ணம் இடிக்கலாம் என்கிறார்.