பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தோணோக்கம் 183 காப்பாற்றுவதற்கே செய்யப்பட்டமையால் அது பாதகச் செயலன்று. 322. மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் ஆனந்தக் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே ஆனந்தம் ஆகி நின்று ஆடாமோ தோள் நோக்கம் 8 மானம்-அபிமானம். மதிமறந்தோம்-தற்போதம் கழலப் பெற்றோம். தோழிப் பெண்களே! தென்னனாகிய பாண்டிப் பிரானின் திருவடிகளைத் தொழத் தொடங்கி, தில்லைக் கூத்தன் அருளைப் பெறக்கூடுமேயானால் தன்மானத்தை இழந்தோம், சுயமாகச் சிந்திக்கும் அறிவை இழந்தோம் என்று பிறர் பேசும் நிலை ஏற்படும். அது ஏன் தெரியுமா? அவனைப் போலவே நாமும் ஆனந்தக் கூத்தாடத் தொடங்கிவிடுவோம். அப்படி நாம் ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினால் சாதாரண மனநிலையில் இருக்கும் பொழுது மகிழ்ச்சிப் பெருக்கில் நாம் ஆடும் ஆட்டத் திற்கும், இறையருள் பெற்று ஆனந்த மேலிட்டில் ஆனந்தக் கூத்தாடுவதற்கும் என்ன வேறுபாடு என்பது உடனே புரிந்துவிடும். - 'நம்மைக் காண்பவர்கள், நாம் மானத்தை இழந்து விட்டோம், சுயமாகச் சிந்திக்கும் அறிவை இழந்து விட்டோம் என்று சொல்வார்களேயானால், அது நாம் ஆனந்தக் கூத்தனின் அருளை ஒரு சிறிது பெற்றுவிட்டோம் என்பதற்கு அடையாளமாகும்’ என்றவாறு. . . . 323. எண் உடை மூவர் இராக்கதர்கள் எளி பிழைத்து கண்நுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதன் பின் எண் இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள் நோக்கம் - 9