பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தோணோக்கம் 185 326. பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால் பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து பரம் ஆகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ 12 பேதைமை-அறியாமை : பரமம். பரம்-மேலானது. அளவிறந்துஎல்லை கடந்து. - திருவண்ணாமலையில் மாலும் அயனும் அடிமுடி தேடிய கதையை இந்தப் பாடல் பேசுகின்றது. 327. ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலம் எல்லாம் பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே ஊழி முதல் சிந்தாத நல் மணி வந்து என் பிறவித் தாழைப் பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ 13 ஏழை-அறிவிலி. சிந்தாத-அழியாத, பிறவித்தாழ்-பிறவியின் தாட்பாள். “நல்லறிவு இல்லாதவர்கள் கூட்டத்தில் ஒருவனாக இருந்த நான் பரம்பரனைப் பணியாமல் வாழ்நாள் முழுவ தையும் பயனில்லாத பாழான வாழ்க்கைக்கு பலியாக்கி விட்டேன். அப்படியிருந்தும், என் அறிவற்ற செயலைப் பொருட்படுத்தாமல், என்றும் அழியாமல் ஊழிக்கு முதல்வனாய் நிற்கும் நல்மணி போன்ற எங்கள் பெருமான் மிக்க வலிமையுடைய பூட்டுப் போன்றிருந்த என் பிறவியைத் தகர்த்து எறிந்துவிட்.ான்” என்க. 328. உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து உளம் புகலும் கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஒட துரை மாண்டவா பாடி தோள் நோக்கம் ஆடாமோ 14 உரைமாண்-இப்படியன் இவ்வண்ணத்தன் என்று சொல்ல முடியாமையால் வாக்கின் எல்லையைக் கடந்த கரைமாண்ட