பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 எல்லையற்ற, இரைமாண்ட-புலனுகர்ச்சியாகிய உணவு அற்றுப்போக. இரிந்து-கேட்டு. - 'சொல்லுக்குள் அடங்காததாய், சொல்லுக்கு அப்பாற் பட்டதாய் ஒளி வடிவாய் நிற்கும் உத்தமன் என் உள்ளத் தில் வந்து புகுந்தான். அதனால் விளைந்த செயல்கள் வருமாறு. கரை என்பதே இல்லாமல் பரந்து கிடக்கும் ஆசை என்னும் பெருங்கடலைக் கடக்க முடிந்தது. மனம் என்ற இரையைத் தேடி அது கிடைப்பதால் என்னுள் நிறைந்திருந்த இந்திரியம் என்னும் பறவைகள் இப்பொழுது என்னை விட்டு ஓடிவிட்டன. காரணம், இதுவரை அந்த இந்திரியங்களுக்கு உணவாக இருந்த என்னுடைய மனம் அவன் உள் புகுந்தவுடன் அவனை நாடிச் சென்றுவிட்டது. மனம் தனக்குரிய தொழிலை விட்டுவிட்டு அவனுடன் சென்றுவிட்டமையின், அதுவரை என்னிடமிருந்த வேகம் அழிந்தது’ என்க. துரை என்ற சொல்லுக்கு வேகம்’ என்ற பொருளும் உண்டு. மனம் இருக்கின்ற வரையில்தான் எதிலும் எல்லா வற்றிலும் வேகத்தோடு, தன்முனைப்புத் தொழிற்படும். அந்தத் தன்முனைப்பு அவன் உட்புகுந்ததனால் அழிந்தது; அதன் பயனாக வேகமும் ஒழிந்தது துரை மாண்ட” என்ற இரண்டு சொற்களால் தன்முனைப்பு, வேகம் என்ற இரண்டும் அழிந்ததாக அடிகளார் இங்குக் குறிக்கின்றார். வேகம் கெடுத்தாண்ட" என்றும் (திருவாசக:1-6) ‘நான்கெட்டவா பாடி (252) என்றும் இரண்டிடங்களில் கூறியதை இங்கு ஒரே இடத்தில் கூறிவிடுகிறார்.