பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. திருப்பொன்னூசல் |அருட்கத்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய பழந் தமிழர் வாழ்வுமுறையில் ஊசல் இடம் பெற்றிருந்ததைப் பழைய சங்கப் பாடல்களில்-கலித்தொகையிலும் பின்னர்ச் சிலப்பதிகாரத்தின் ஊசல்வரியிலும் காண்கிறோம். கலியில் காணப்படும் ஊசல், மரக் கிளையில் நீண்ட கயிறுகள் இரண்டை மேலிருந்து கீழே தொங்குமாறு கட்டி அவற்றிடையே ஒரு பலகையைச் செருகி, அதில் அமர்ந்து ஆடப்பட்டதாக அறிகிறோம். மரக்கிளையிலிருந்து தொங்குகிற ஊஞ்சல் ஆதலின், இதில் அமர்ந்து ஆடுபவர்கள் தங்கள் கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை ஆட்டிக் கொள்வது ஒரளவு கடினமாகும். ஐய சிறிது என்னை ஊக்கி (கு.கலி: 1-15) என வரும் பகுதி இந்த ஊஞ்சலில் உள்ளவர்களைக் கீழே நிற்கும் ஒருவர் ஆட்டவேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. இதனெதிராக, வீட்டினுள் உத்தரத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட கயிற்றில் இணைக்கப்பட்ட ஊஞ்சலில் இருந்து ஆடும்பொழுது, ஆடுபவர்களே தங்கள் கால்களைத் தரையில் உதைத்து எம்பி ஆடமுடியும். அடிகளார் பாடிய பொன்னுரசல் ஆறடித் தரவுக் கொச்சகமாக அமைந்துள்ளது. இந்த அமைப்பு முறையில் ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் அமைந்துள்ளன. உதாரணமாக, சீார் பவளங்கால் முத்தங்கயிறாக என்ற தடிப்பு எழுத்துகளில் பின் வரும் எழுத்துக்கள் மட்டுமே அச்சிடவேண்டும்: ரா, ளங்கா, தங், றாக அடியில் குறிப்பிட்ட எழுத்துக்களில் அழுத்தம் தந்து பாட்டைப்