பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொன்னூசல் 189 ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி போர் ஆர்வேல் கண் மடவீர் பொன் ஊசல் ஆடாமோ 1 ஊராக-(அடியேன் நிலைத்து வாழும் இடமாக ஏர்-அழகு. மடவீர்-எதிர்த்தாரைப் பொது வெற்றிகானும் வேல்போன்ற கண் களையுடைய பெண்களே! பவளத் தூண்களை நட்டு, முத்து மாலைகளையே கயிறாகச் செய்து, இடையே பொற்பலகையை இணைத்து, அதில் ஏறி உத்தரகோசமங்கைத் தலைவனின் புகழ்பாடி ஆடுவோமாக! நாயடியேனாகிய எனக்கு எளிதாகக் கிடைத்து விட்டமையால் அத்திருவடிகளின் பெருமையைக் குறைத்து நினைத்துவிட வேண்டா, நாராயணன் அறியா நாள் மலர்ப் பாதங்கள் அவை என்றவாறு, 330. மூன்று அங்கு இயங்கு நயனத்தன் மூவரத வான் தங்கு தேவர்களும் காண மலர் அடிகள் தேன் தங்கி தித்தித்து அமுது ஊறித் தான் தெளிந்து அங்கு ஊன் தங்கிநின்று உருக்கும் உத்தரகோசமங்கைக் கோன் தங்கு இடைமருது பாடிக் குல மஞ்ஞை போன்று அங்கு அன நடையீர் பொன் ஊசல் ஆடாமோ 2 குலமஞ்ஞை போன்று-சிறந்த சாயலால் மயிலைப்போன்று. அனநடையீர்-நடையால் அன்னத்தை ஒத்த பெண்களே! விளங்குகின்ற மூன்று சூரிய, சந்திர, அக்கினி) கண்களை உடையவன். தீ எப்போதும் மேல் நோக்கிச் செல்லும் இயல்புடையதாகலின், மேல் நோக்கி நீண்டுள்ள நெற்றிக் கண்ணை அக்கினி என்று கூறினர்போலும்,