பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அன்னைப் பத்து |ஆத்தும பூரணம்) மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது அன்னைப் பத்தில் வருகின்ற பத்துப் பாடல்களும் தலைவியின் மனநிலையை நன்கு அறிந்தவளாகிய தோழி, செவிலித் தாய்க்கு அதனை எடுத்துக்கூறுவதுபோல் அமைந்துள்ளது. ஆனால், அகத்திணையின் தொடர்புடையதுபோலப் பாடப் பெறும் இப்பாடல்கள் முழுவதையும் தொல்காப்பியத்தில் சொல்லப்பெற்ற அகத்திணையோடு பொருத்தி, பொருள் காணமுற்படுவது பொருத்தமுடையதா என்பது சிந்திக்கற்பாலது. இவ்வாறு பலரும் பொருள் காண்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. திருக்கோவையார் அடிகளாரால் இயற்றப்பெற்றதாகும் என்ற கருத்து, இன்று பலரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். அகத்திணை இலக்கணத்திற்கு உட்பட்டு பலபாடல்களைத் தேவாரம் பாடிய மூவரும், நம்மாழ்வார் போன்ற ஆழ்வார்களும் அடிகளாருக்கு முற்பட்ட காலத்திலேயே பாடியுள்ளார்கள். அகத்திணை இலக்கணத்திற்கு முற்றிலும் கட்டுப்பட்ட திருக்கோவையாரைப் பாடியவர் அடிகளார் என்று கொண்டதால், திருவாசகத்தில் வரும் அன்னைப்பத்திற்கும் குயில்பத்து முதலியவற்றிற்கும் இந்த அடிப்படையிலேயே பலரும் பொருள் கூறியுள்ளனர். அதைத் தவறு என்று கூறுவதற்கில்லை. என்றாலும் புதிய கண்ணோக்கத்துடன் பார்க்க முனைவதிலும் தவறில்லை என்று கருதியதால்தான் இந்த அன்னைப்பத்து உள்பட குயில்பத்து, கோத்தும்பி