பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னைப் பத்து 203 தலைவி தனக்குத் தானே பேசிக்கொள்வதன் முத்தாய்ப் பாகும். 339. கண் அஞ்சனத்தர் கருணைக் கடலினர் உள் நின்று உருக்குவர் அன்னே என்னும் உள் நின்று உருக்கி உலப்பு இலா ஆனந்தக் கண்ணி தருவரால் அன்னே என்னும் 2 அஞ்சனம்-மை. உலப்பிலா-அழியாத, உணர்ச்சிப் பெருக்கால் பக்தையின் பேச்சில் உரை தடுமாற்றம் ஏற்படுவதை இப்பாடலில் நன்கு அறிய முடிகிறது. அஞ்சனம் தீட்டப்பெற்ற என் கண்ணினுள்ளார் என்ற பொருளைத் தரும் சொற்கள், உரை குழறியது காரணமாகக் கண் அஞ்சனத்தார்' என்று நின்றன. அதே போன்று அடுத்த சொல்லும் கருணையில் கடல் போன்றவர் என்ற பொருளைத் தருவதற்குப் பதிலாக, 'கருணைக் கடலின்ர் என்று நின்றது. அவனைப்பற்றிப் பேசும்பொழுது, உணர்ச்சி காரணமாக உரை தடுமாறிற்றே தவிர, தன்னைப்பற்றிப் பேசும்பொழுது உரைதடுமாறவில்லை. எனவே, உள்தின்று உருக்குவர் என்ற் தொடர் முறையாக அமைந்துவிட்டது. இப்பொழுது தன்னை ஆட்கொண்ட தலைவன் யார், அவன். எங்கே இருக்கிறான், அவன் என்ன செய்கிறான் என்ற மூன்று வினாக்களுக்கு விடை கிடைத்துவிட்டது. கருணைக்கடல் போன்றவன் அவன் என்பது முதல் வினா விற்கு விடை: மை தீட்டப் பெற்ற கண்ணின் உள்ளான் என்பது இரண்டாவது வினாவிற்கு விடை உள்நின்று உருக்குகிறான் என்பது மூன்றாவது வினாவிற்கு விடை யாகும். -