பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ‘என்னையும் ஒரு பொருளாக மதித்து, ஆட்கொள்ள வந்தவர் விரிந்து படரும் அறுகம்புல்லையும், சந்தனத்தை யும் மார்பில் அணிந்திருந்தார். என்னை ஆட்கொள்ள வரும் தலைவர் (அடிகளார்) கையில் ஒரு தாளத்தையும் கொண்டிருந்தார். . ஒரு மாபெரும் தலைவனுக்குரிய எந்த அடையாளமும் இல்லாமல் மிகச் சாதாரணமான அருகம் புல்லையும் சந்தனத்தையும் பூண்டவன் என்று கூறியவுடன் எம்மை ஆளவந்தவன் மிகச் சாதாரணமானவன் என்று நினைந்துவிடாதே. அவர் கையிலுள்ள தாளத்தை; பிச்சையெடுப்பவர்கள் வீட்டிலுள்ளவர்களை ஒசைமூலம் அழைப்பதற்குரிய தாளக்கருவி என்று எண்ணிவிடாதே. இவர் கையிலுள்ள தாளம் காலதத்துவத்தை அளவிட்டு அறுக்கும் செயற்கரும் செயலைச் செய்கின்ற கருவி என்பதை நினைப்பாயாக கால தத்துவத்தை அறுதியிடும் பேராற்றல் அவருடைய ஒரு கையில் தாள வடிவில் இருக்கிறது என்பதை அறிந்தால் அவர் எத்தகையவர் என்பதை ஒரளவு அறிந்துகொள்ளலாமல்லவா? 346. தையல் ஒர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம் நையும் இது என்னே அன்னே என்னும் 9 தையல் - உமாதேவி பெண்பாதியராயிருந்தும் தவவேடத்தர் என்பது வியப்பு. தாபத வேடம்- துறவுக்கோலம். ஐயம் - பிச்சை. ‘ஒரு பெண்ணை இடப்பாகத்தில் வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் துறவுக்கோலத்தையும் மேற்கொண்டு, நம் வீட்டு வாசலில் பிச்சை கேட்டு வந்து நின்றார். அவ்வாறு