பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 குயிற் பத்து 217 கள் இதனைப் போக்கிக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுவே இறைவனிடம் அடைக்கலம் புகுதலாகும். அந்த அடைக்கலம், வலிமையும் முழுத்தன்மையும் பெறப் பெற, பழைய துன்பமும், துயரமும் மறைந்து, மனத்தில் அமைதி தோன்றுகிறது. இந்த வளர்ச்சியில் பெருமகிழ்ச்சியே தோன்றுகிறது. 350. நீல உருவின் குயிலே நீள் மணி மாடம் நிலாவும் கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில் சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை ஞாலம் விளங்க இருந்த நாயகனை வரக்கூவாய் 3 கோல அழகு-மிக்க அழகு; கொடி மங்கை-பூங்கொடி போன்ற பெண். சீலம்-எளியனாயிருக்குந்தன்மை. 'நீல உருவினை உடைய குயிலே! பூங்கொடி போன்ற உமையவள் உறையும் திருஉத்தரகோசமங்கையில் உள்ள வனை வருமாறு கூவுவாயாக’ என்றவாறு. குயிலை, 'நீல நிறமுடைய குயிலே!’ என்று அழைத்ததன் நோக்கம் ஒன்று உண்டு. அந்தக் குயில், யாரை அழைக்க வேண்டும் என்று கூறவந்த அடிகளார், 'உத்தரகோச மங்கையில் உறையும் பெருமானை அழைப்பாயாக’ என்று மட்டும் சொல்லவில்லை. மிக விரிவாகக் கோல அழகில் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில் என்று ஏன் சொல்ல வேண்டும்? உத்தரகோசமங்கையானை என்று மட்டும் கூறியிருந்தால், 'எனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? நான் ஏன் அவனை வாவென்று கூவ வேண்டும்?' என்று சொல்லி, கூவ மறுத்துவிடலாம் அல்லவா? ஆகவேதான், ஒரு புதிய