பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருப்பள்ளியெழுச்சி |திரோதானசுத்தி அரசர்களைத் துயில் எழுப்புவதுபற்றிப் பழைய இலக்கியங்களில் காணலாம். உறக்கத்திலிருப்பவர்கள் துயிலெழும்போது நல்ல சொற்கள் காதில் விழுமே யானால், மனம், பொறி, புலன் ஆகியவை நற்பணி செய்ய இச்சொற்கள் தூண்டுகோலாக அமையும். உறங்குவதற்குச் சில விநாடிகள் முன்னர், மனத்தில் என்ன எண்ணம் நிலவியதோ, அதுவே விழித்தவுடன் முதல் எண்ணமாக வரும் என மனவியலார் கூறுகின்றனர். பழங்கால மன்னர்கள் பெரும்பாலும் கேளிக்கைகளில் பெரும் பொழுதைப் போக்கினர் ஆதலின், அந்நிலை யிலேயே உறங்கச் சென்றவர்கள் விடியற்காலையில் சிறந்த எண்ணங்களேர்டு எழுதல் இயலாத காரியம். அதனாலேயே நம் முன்னேர் சூதர்' என்ற பெயருடைய தனிக்குழுவை ஏற்பாடு செய்து, அரசனைத் துயில் எழுப்ப அவர்களைப் பயன்படுத்தினர். அரசருடைய நற்செயல்கள், அவர்கள் வெற்றி ஆகியவற்றைப்பற்றி அந்த விடியற்காலை நேரத்தில் சூதர்கள் பாடினர். அதனைக் கேட்டுக் கொண்டே எழுகின்ற மன்னர்தம் மனத்தில் நல்ல எண்ணம் தோன்றும். ஆதலால், இதனைப் பழமையான தொல்காப்பியம் 'சூதர் ஏத்திய துயிலெடை நிலை’ (தொல்-பொருள் 88) என்று குறிப்பிடுகிறது. இறைவனை, ஏனையோர் போன்று நிர்க்குணப் பிரம்மமாகக் கொள்ளாமல், தம்முடைய அன்புக்கும் பக்திக்கும் உரிய, நெருங்கிய தொட்ர்புடைய தலைவனாகக்