பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 237 எந்த ஒரு செயலும் நடைபெற, ஒரு முதற்பொருள் அல்லது மூலதனம் வேண்டும். இந்த மூலதனம் பருப்பொருளாக அமைந்துள்ளது. ஆனால், இதனினும் வேறுபட்ட ஒரு மூலதனம் உண்டு. அது கண்ணுக்குத் தெரியாது; பொறி புலன்களுக்கு அகப்படாது. ஆனாலும், அது இல்லையானால் உயிர்களின் வாழ்வு ஒரு விநாடிகூட நீடிக்காது. எனவே, உயிர்கள் வாழ, வாழ்வு நடத்த-ஈடு இணையற்ற துணையாய், மூலதனமாய் இருக்கும் இறைவனை ‘வாழ்முதல்’ (மூலதனம்) என்கிறார் அடிகளார். இவ்வாறு கூறுவதால் வாழ்வு நன்கு வளர்வதற்குத் தேவையான நீர், சோறு, அனுபவிக்கப்படும் இன்பப் பொருள்கள் ஆகிய அனைத்தும், அந்த மூலதனமே என்பது பெற்றாம். வாழ்முதல் ஆகிய பொருள் என்று அடிகளார் குறிப்பிட்டதை நம்மாழ்வார் உண்ணும் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் (நாலாயிர-2700 என்று கூறுவதைக் காணலாம். ஒவ்வொரு விநாடியும் இந்த வாழ்வு நடைபெற உதவும் மூலதனத்தை எவ்வாறு புகழ்ந்துரைப்பது? போற்றி என்ற சொல்லைவிடச் சிறந்த சொல் இந்த மொழியில் இல்லை ஆதலால் 'என் வாழ்முத லாகிய பொருளே போற்றி என்கிறார் அடிகளார். இறைவனுடைய படைப்பில் இணையான அழகும் பயனும் உடைய வேறு பொருள்களைக் காண்டது கடினம். பல்வேறு நிறமுடைய, பல்வேறு மணமுடைய மலர்கள் அனைத்தும் அழகுப் பெட்டகமாகும். துய்மையான ஆழ்ந்த பக்தி என்பது மலர்களில் காணப்படும் அழகைப் போல பொதுத் தன்மையுடையது. நிறம், வடிவம், மணம் ஆகியவை பல்வேறு இன மலர்களுக்குள் மாறுபட்டிருப் பதைப் போல அடியார்கள் பக்தி செலுத்தும் முறையும் வேறுபட்டிருக்கும். ĮSITLO, ரூபம் அற்ற அந்தப் பரம்பொருளை ஒருவர் தலைவனாகவும், ஒருவர் தந்தை யாகவும், ஒருவர் தாயாகவும், ஒருவர் எஜமானனாகவும்