பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 241 அருணன் நம்மை நோக்கினால், மறைந்துவிடுகின்றன என்ற குறிப்புப் பொருளும் இம்முதலடியில் அமைந்துள்ளது. அருணனை அடுத்து வரும் கதிரவன் மெல்ல மெல்ல மேலேறி வர, தாமரைகள் மலர்கின்றன. எங்கோ இருக்கின்ற சூரியன் தன் கதிர்களை வீச, அதன் பயனாகத் தாமரைகள் ம்லர்கின்றன. அம்மலரிடத்து வந்த அரச வண்டுகள் (அண்ணல் அறுபதம்) ரீங்காரம் இடுகின்றன. இம்மலர்களை ஒத்த இறைவனின் திருக்கண்கள் மெல்லத் திறக்க அதிலிருந்து வெளிப்படும் கருணையாகிய தேனை உண்கின்ற அடியார்கள் வண்டுகள் ரீங்காரமிடுவதைப்போல பள்ளியெழுச்சி பாடுகின்றனர். இத்தகைய வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பெருமானே! ஆனந்த மலையே! அலைகடலே! பள்ளி எழுந்தருளாயே என்கிறார். மலை என்று வாளா கூறாமல், ஆனந்த மலை என்றும், அருள் நிதி தரவரும் மலை என்றும் அடிகளார் கூறுவது நின்று சிந்திக்கவேண்டிய இடமாகும். பெரியவர்களுடைய பண்பிற்கும், இறைவனுக்கும் மலையை உவமையாகக் கூறுவது பழைய இலக்கியங்களில் அதிகம் காணப்பெறும் ஒன்றாகும். ஆனால், அடிகளார் பயன்படுத்திய உருவகம் வாலாயமாகச் செய்யப்படுகின்ற உவமை, உருவகங்களிலி ருந்து மாறுபட்டது என்பதை நம் மனத்திடை தோற்றுவிப் பதற்காகவே மலைக்கு அடையாக அருள் நிதி தரவரும்’ என்ற தொடரையும், ஆனந்தம் என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார். மலை என்பது நுனி சிறுத்தும், அடி பெருத்தும் இருப்ப தோடல்லாமல் பூமிக்கு மேலே காணப்பெறும் பகுதியை விடப் பல மடங்கு அதிகப்படியான் பகுதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் மறைந்திருக்கும்