பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 எஜமான விசுவாசத்துடன் இத்தலைவனைத் தம் இதயத்தில் நிறுவி வழிபாடு செய்தவர்கள் ஆவர். இவ்வழிபாடு தலைமுறை தலைமுறையாக நடைபெறுதலின் அதில் ஒர் அடியாரின் உடம்பைப் பழங்குடில்’ என்று கூறுவதும் பொருத்தமுடையதாகும். முதல் நடு இறுதி என்ற மூன்று நிலைகளை உடைய பிரபஞ்சம் கண்ணாலும் மனத்தாலும் காண்பதற்கும் கற்பனை செய்வதற்கும் உரிய ஒன்றாகும். ஆனால், இந்த மூன்றிற்கும் முற்பட்டு முந்தியதாய் நிற்கும் அல்லது அநாதியாய் நிற்கும் காலத் தத்துவத்தை மூவரும் அறிகிலர் என்ற இக்கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இம்மூவரும் முதல் தெய்வங்கள் எனினும், காலத்தத்து வத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். காலத்திற்குக் கட்டுப்பட்ட இவர்கள் காலாதீத மூர்த்தியாகிய இறைவனைக் காண்பது என்பது தருக்க ரீதியாக இயலாத காரியமாகும். அவர்களே காணமுடியாது என்றால், உலகிடைப் பிறந்து வாழும் ஏனையோர் காண்பது எங்ங்னம்? அடியார்களுக்கு அதுவும் எளிதானது என்பதைக் குறிக்கத்தான் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரன்' என்றார். ஒரே மூர்த்தியாயினும் ஒவ்வோர் r அடியாரின் இயல்பிற்கு ஏற்ப அவர்கள் வேண்டும் உருவம் கொண்டு, அவர்கள் இதய கமலங்களுள் செல்கிறான். அதாவது, ஒரே பரன் பல்வேறு அடியார்களின் பல்வேறு பழங்குடில்களில் எழுந்தருளும்போது ஒரே வடிவு டன் சென்றான் இல்லை. பந்தனை விரலி உடன் இருப்பது உண்மையாயினும் அவன் அடியார்கள் விருப்பத்திற்கேற்ற வடிவு கொண்டு, அவர்களின் இதய கமலங்களில் புகுகின்றான். இந்த அருங்கருத்தைப் பழைய திருமுருகாற்றுப்படை