பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் மூத்த திருப்பதிகம் 275 அந்தத் துயரத்தினிடையேயும், குருநாதர் கூறிய ஒர் ஆனை நினைவுக்கு வருகிறது. அந்த ஆணை "கோலமார் தருப்பொதுவினில் வருக" (திருவா 2; 128) என்பதாகும். திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெற்ற பல நாட்கள் சென்ற பின்னர் ஒவ்வொரு தலமாக வணங்கிக்கொண்டு இப்பொழுது தில்லைக்கு வந்துவிட்டார். தில்லையுள் நுழைந்து கூத்தனைத் தரிசித்தவுடன் பழைய நினைவுகள் அலையலையாக மனத்திடை எழுகின்றன. அவ் உணர்ச்சித் தொகுப்பின் பயனாக வெளிப்படுவது இப்பாடலாகும். அடியார் கூட்டத்திடை இருந்ததும், குருநாதர் பொது வினில் வருக எனப் பணித்ததும் ஒரே சமயத்தில் நிகழ்ந்த வேறுபட்ட இரண்டு செயல்களாகும். நிகழ்ந்தவற்றை அசைபோடும் மனம், பழைய நிகழ்ச்சி ஒன்றைச் சிந்திக்கும்பொழுது அதனோடு தொடர்புடைய ஏனையவற்றையும் நினைத்தல் இயல்பாகும். இதனை மனவியலார், தொடர்புடைய எண்ணங்கள் மனத்தில் goGogi (association of ideas) arabrå ø, o]}ouff. இந்த அடிப்படையில், பொதுவினில் வந்தவுடன் அடியார் கூட்டம் நினைவுக்கு வருகிறது. அக்கூட்டத் தினிடையே தாம் இருக்கும் வாய்ப்புப் பெற்றதும் நினைவுக்கு வருகிறது. அவர்களிடையே அப்படி இருக்கும் பொழுது பெற்ற அனுபவமும் நினைவுக்கு வருகிறது. எனவே, அடியார் கூட்டத்தினிடையே இருக்கும்படியான வாய்ப்பை மீண்டும் தமக்கருள வேண்டும் எனக் கூத்தனை வேண்டுகிறார். 'உடையாள் உன்தன் நடுவு இருக்கும், உடையாள் நடுவுள் நீயிருத்தி என்ற அடி மிக நுண்மையான ஒரு கருத்தை வெளிப்படுத்துவதாகும். அவள் நடுவுள் நீ இருக்கின்றாய், உனது நடுவில் அவள் இருக்கின்றாள்