பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் மூத்த திருப்பதிகம் 285 இதற்கு முன்னர்ச் சில பாடல்களில் அடியார் கூட்டத் திடையே திருவோலக்கம் கொண்டிருக்கும் பெருமான் எதிரே தானும் செல்லவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார். அது உடனே கைகூட வேண்டும் என்று எதிர்பார்த்தார். அது கைகூடுவதற்குத் தாம் எடுக்க வேண்டிய முயற்சி எதுவுமில்லை என்பதை உணர்ந்தார். அவ்விருப்பம் நிறைவேறவேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அவன் அருள் கிட்டுதலேயாகும். எவ்வளவு வேண்டியும், அவன் அருள் கிட்டவில்லை ஆதலால் அடிகளார் மனம் நொந்து தொய்வடைகின்றது அடியார் கூட்டத்திடை இருந்தபொழுது, அடிகளாரின் மனம் தெளிவோடு இருந்தது. அந்தத் தெளிவில் இன்பமும், உறுதியும் கலந்திருந்தன. இப்பொழுது அக்கூட்டம் இல்லை ஆதலால், தம்முடைய மனத்தை மருளார் மனம் என்கிறார் அடிகளார். தெளிவடையாமல் குழம்பியுள்ள மனத்தை, மருண்ட மனம் என்று கூறுதல் மரபு. அப்படி மருண்ட மனமுடைய ஒருவனை எவ்வாறு தெளிவிப்பது? தெளிந்த மனமுடைய கூட்டத்தை இவனுக்குக் காட்டிவிட்டால் இவனுடைய மருளார் மனம் தெருளார் மனமாக மாறிவிடும். தெருளார் கூட்டத்தில் சேராமல், மருளார் மனத்தோடேயே சாக நேரிட்டால், ஏனையோர் சாவிற்கும் இவருடைய சாவிற்கும் வேறுபாடு இல்லையாய் முடியும். திருப்பெருந்துறையில், ஆட்கொள்ளப்பெற்ற ஒருவர், அடியார் கூட்டத்திடை இருக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒருவர், எல்லாவற்றையும் இழந்து, மருளார் மனத்தோடு செத்தால், காண்பவர் சிரிக்கமாட்டார்களா? மிக உயர்ந்த நிலையில் இருந்த ஒருவர் இப்படிச் சாதாரண மனிதர் அடையும் நிலையை அடைந்துவிட்டாரே என்று நினைத்தவுடன் இதனைக் காண்பார், இரங்குவதற்குப்