பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் மூத்த திருப்பதிகம் 287 தேனித்தல் ஏற்படுகின்றது. தேனித்தல்' என்பது தியானம் என்ற சொல்லின் பரியாயச் சொல் ஆகும். சிரிப்பு, களிப்பு என்பன தோன்றி, நின்று மறையும் இயல்புடையன. இதனெதிராக தேனித்தல் அல்லது தியானித்தல் என்பது நீண்டநேரம் நிலை பெற்றிருக்கும் இயல்புடையது. எனவே, இங்குக் கூறப்பெற்ற சிரிப்பார், களிப்பார், தேனிப்பார் என்ற மூன்று சொற்களும் இந்த மூன்று நிலைகளில் இருப்பவர்களைக் குறிக்கின்ற சொற்களாகும். இவர்கள் அனைவரும் மூன்று நிலைகளில் இருப்பினும், மூன்று நிலைகளுக்கும் அடித்தளமாய் இருப்பது இறையனுபவ ஆனந்த மேலிடேயாகும். அந்தத் தாக்கம், ஒரளவு ஏற்பட்டவுடன் சிரிப்பும், கொஞ்சம் அதிகம் ஏற்பட்டபொழுது களிப்பும், இன்னும் மிகுதியாக ஏற்பட்டபொழுது தேனிப்பும் ஏற்படுகின்றன. ஒரே காரணத்தால் இந்நிலை அடைந்தவர்களாதலின் இவர்கள் தம்முள் கூடித் தம்முடைய ஆனந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனந்தத்தின் காரணம் அவன் திருவருளே யாதலால் திருவார்த்தை (திருவருள் பற்றிய வார்த்தைகள்) விரிப்பார்’ என்றார் அடிகளார். - இனி, விரிப்பார் என்று சொல்லியதற்குப் பிறகு ‘கேட்டார்’ என்று கூறியதால், தம்மினும் மேம்பட்ட அனுபவத்தைப் பெற்ற ஒருவர் (சமாதிநிலை சென்றுவரும் ஒருவர்) அதனை விரித்துச் சொல்லும்பொழுது, அதனை அடுத்த மூன்று நிலையில் உள்ளவர்களும் அமைதியாக இருந்து கேட்கின்ற இயல்பையே குறிக்கின்றார். தேனிப் பார் தம் அனுபவத்தைப் பேசும்பொழுது சிரிப்பாரும், களிப்பாரும் அதனை அமைதியாகக் கேட்கின்றனர். இனி, இம்மூவகை மக்களும் தம்மைய்ன்றி ர்ன்ன்ய இருவகையினரும் பெற்ற அனுபவத்தைக் கேட்டு, அவர் களை மெச்சுகின்றார்கள். இதற்கடுத்த நிலை பேச்சடங்கி