பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 உப்புப் பொம்மை தண்ணிருக்குள் அமிழ்ந்தது போல இந்த இரண்டாவது உணர்வு இறையனுபவத்தில் மூழ்க மூழ்க இரண்டும் ஒன்றாகிவிடுதலின் “நின்று உணர்வதோர் உணர்வே' என்கிறார் அடிகளார். இதுவே மூன்றாவது நிலை, இப்பாடலின் இறுதிப்பகுதி யான் உன்னை உரைக்கு மாறு உணர்த்தே' என்பதாகும். மூன்றாவதாக உள்ள உணர்வு வடிவாகிய இறைப்பொருளை அடிகளாரிடத்துப் புதிதாகத் தோன்றிய நான் கலப்பற்ற இரண்டாவது உணர்வு அனுபவிக்கின்றது இந்த அனுபவத்தை எப்படிச் சொற்களால் சொல்ல முடியும்? பொறி, புலன்கள் ‘நான்' என்பவற்றோடு கலந்து சித்தத்தில் தோன்றும் சாதாரண உணர்வைக்கூட, சொற்களால் சொல்லமுடியாது என்றால், எல்லாவற்றை யும் கடந்து நிற்கும் இந்த உணர்வின் அனுபவத்தை எப்படிச் சொற்களால் சொல்ல முடியும்? சொற்களால் சொல்ல வேண்டுமானால் அந்த நான் தோன்றியேதிரும் 'நான்’ஐ. இகழ்ந்து அனுபவித்த ஒன்றை, நான் அறியாத ஒன்றை இந்த நான்’ எப்படி உரைக்க முடியும்? என்றாலும் இந்த அருள் அனுபவத்திலிருந்து மீண்டவுடன் அது சொல் கடந்தது என்பதை நன்கு அறிந்திருந்துங்கூட, அடிகளாருக்கு ஒரு ஆசை பிறக்கின்றது. எனவே மூன்றாவது உணர்வாகச் சொல்லப்பட்ட அந்த இறைப்பொருளைப் பார்த்து, உரைகடந்து நிற்கும் உன்னை உரையினால் சொல்ல வேண்டுமென்று விழைகின்றேன்; அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும். உரைகடந்த அனுபவமாகிய நீ உரைக்குள் அகப்படும் அனுபவமாகச் சுருங்கி, நான் உரைக்குமாறு நீ உதவவேண்டும் என்கிறார் அடிகளார்.