பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நினைப்பதும் செய்வதுமே சரி, பிறர் செய்வது அனைத்தும் தவறு என்று தம்முள் முரணுகின்றனர் ஒருபுறம்; ஆதலால் பித்த உலகாயிற்று. இத்தனை கலக்கம், குழப்பம் ஆகியவற்றிடையே வாழ்ந்த என்னை, மரணம்-பிறப்பு என்ற இரண்டினால் ஏற்படும் அச்சம் மூழ்கடிக்கத் தொடங்கியது. ஆனால் அந்தக் கலக்கமோ, அச்சமோ என்னை ஒன்றும் செய்யாதபடி என் மயக்கத்தைப் போக்கிய வித்தகத் தேவன் அவனாவான். அப்படிப் பட்டவனை அடைந்து ஊதுவாயாக’ என்று கூறும்போது வண்டிற்கு மனத் தென்பு பிறக்கிறது. ஒரு தனிமனிதருக்கே இத்துணை நலங்களைப் புரிந்த ஒருவன் என்மாட்டு இரக்கம் கொள்ளாமல் இருப்பானா என்ற தென்பு ஏற்பட்டவுடன் வண்டு அவனை அடைந்து ஊதுமல்லவா? ஆறு பாடல்களில் அவன் கருணையின் அளவையும் பெருமையையும் கூறினார் என்றாலும், வண்டின் மனத்தில் அக்கருணையின் அளவு நன்கு தெளியப்படவில்லை போலும். அதை உணர்ந்த அடிகளார் ஒர் உதாரணத்தின் மூலம் வண்டின் உள்ளத்தில் தெளிவு பிறக்குமாறு செய்கின்றார். 'வண்டே! அவன் திருவடிகளைச் சென்று ஊதுமாறு நான் ஏன் பலமுறை கூறினேன் என்று உனக்குத் தெரியுமா? அதற்குரிய விளக்கத்தை இதோ சொல்கிறேன் கேள். நாயேனாகிய என்னைத் தன் திருவடிகளைப் பாடுமாறு பணித்தான் அவன். திருவாச. 225 அப்படிப் பாடத் தொடங்கியவுடன் என்ன பரிசு கிடைத்தது தெரியுமா, எனக்கு? நாயைச் சிவிகையில் ஏற்றியதுபோல என்னை அடியார் கூட்டத்திடையே ஏற்றினான் (திருவாச:222). இதுமட்டுமல்ல, வண்டே படைத்தல், காத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் நான்முகனும் மாலும் அவனுடைய அடிமுடி காணமுடியாமல் ஏமாந்து நிற்கும்பொழுது நாய்க்குத் தவிசு இட்டதுபோல் என்னைத் தன் அடியாரிடையே இருக்குமாறு (திருவாச:234) பணித்தான். அவனைப் பாடியதால் பெற்ற பயன்