பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 35 கொண்ட கருணையால்’ என்று கூறவந்த அடிகளார், இறைவனின் கருணையை அவன் திருவடிகளின் மேல் ஏற்றி, கருணையுடையான் கழல் என்று பாடாமல், கருணைக் கழல் என்றே பாடிவிட்டார். திருச்சாழல் திருச்சாழல், திருவுந்தியார், திருத்தசாங்கம் ஆகிய மூன்றும் அடிகளாரால் பாடப்பெற்றவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், ஏனைய திருவாசகப் பாடல் களோடு இவற்றையும் வைத்துக்கொண்டு பார்க்கும்போது, திருவாசகத்தின் அடிப்படைக்கும் போக்கிற்கும் மாறுபட்ட முறையில் இம்மூன்றும் அமைந்துள்ளன என்று எண்ணத் தோன்றுகிறது. முன்னருள்ள அகவல்களில் உணர்ச்சிப் பெருக்கிற்கு அதிக இடமில்லை. செய்திகளை விரைவாக அடுக்கிக்கூறும் ஆற்றல் அகவலுக்கு உண்டு; அதனை அறிந்த அடிகளார் மிகுதியான செய்திகளை அகவல்களில் தந்துள்ளார். ‘மெய்தான் அரும்பி’ என்று தொடங்கும் திருச்சதகத்தின் முதல் பாடலிலிருந்து திருத்தெள்ளேணம் முடியவுள்ள 250 பாடல்களும் அடிகளாரின் இறையனுபவத்தையும், அதனால் அவர் பெற்ற ஆனந்தத்தையும் மாறிமாறிக் கூறிவருகின்றன. மாபெரும் தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கிய திருவெம்பாவைப் பாடல்கள்கூட இறையனுபவத்திற்கு முதலிடம் தந்து, தத்துவத்திற்கு இரண்டாம் இடமே அளித்துள்ளது. அடிகளார் காலத்தில் புத்த சமயம் ஏறத்தாழத் தமிழகத்தை விட்டுப் போய்விட்டதென்றாலும் அதன் அடிச்சுவடுகளும் ஆதிசங்கரரின் ஏகான்மக் கொள்கையும்