பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 357 தமிழில் வரும் அறம், உயிர்கள்மாட்டு அன்பு கருணை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று விதிக்கின்றது. ஆனால், வேதம் உயிர்க்கொலை புரியும் வேள்வியைப் பற்றியும் பேசுகிறது. அப்படியிருக்க வேதத்தை உபதேசித்தால், அது இத்தமிழர் கண்ட அறத்திலும் மாறுபட்டே இருக்கும். இப்பிரச்சினையை மனத்துட் கொண்டார்போலும் அடிகளார். ஆதலால், நான்மறையின் உட்பொருளை என்றார். யக்ளும் என்ற சொல்லை உயிர்க்கொலையோடு கூடிய வேள்வி என்ற பொருளிலேயே பலரும் பயன்படுத்தி வந்தனர்; வருகின்றனர். ஆனால், யக்ஞம் என்ற சொல்லின் உட்பொருள் தியாகம் என்பதாகும். அதனால்தான் அடிகளார் நான்மறையின் உட்பொருள் தமிழர் கண்ட அறத்தோடு மாறுபட்டது அன்று என்ற ஒரு பெரிய கருத்தை அறிவிப்பதற்காகவே உட்பொருளை அறமாக உரைத்தான் என்று கூறியுள்ளார். இனி, அறம் என்பது அன்பு, அருள், கொல்லாமை, உயிரிரக்கம் ஆகியவை என்று பொருள் கொண்டால் இவற்றை முனிவர்களுக்குக் கற்றுத்தந்தவன் தான் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதை 270ஆம் பாடலில் பின்னிரண்டு அடிகளில் கூறுகிறார். ஆலின் கீழிருந்த நால்வரும் மனிதர்கள். எத்துணைப் பெரிய முனிவர்களாயினும்-இறைவனை நேரே காணும் தகுதியுடையவர்கள் ஆயினும், அவர்கள் மனிதர்கள் என்பதை மறுத்தலாகாது. எனவே, அவர்களுக்குரிய அறத்தை அவர்களுக்குப் போதித்தான். சமுதாய வாழ்விற் கூட அரசர்களுக்குரிய அறம் வேறு; மக்களுக்குரிய அறம் வேறு. கொலை என்பது சமூக அறத்தில் தடைசெய்யப் பட்டது ஆயினும், குற்றவாளிகளைத் தண்டிக்கும் கடமை யுடைய அரசர்க்கு இது பொருந்தாது. அதேபோல