பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பின்னுரை 361 என்பவைதள் இரத்தக் கலப்புடைய மிக நெருங்கிய உறவினராவர். இவரையல்லாத ஏனை உறவினர் யாவரும் சுற்றம் என்ற சொல்லால் குறிக்கப்பெற்றனர். இந்தச் சுற்றத்தைத் துறப்பது எளிது. ஆனால், முன்னர்க் கூறப்பெற்ற தாய், தந்தையர் முதலான இரத்தக் கலப்புடைய உறவினரைத் துறத்தல் அவ்வளவு எளிதன்று. இக்கருத்துக்களை யெல்லாம் மனத்துட் கொண்ட அடிகளார், துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்’ என்று முதற் பாடலில் கூறிவிட்டு, இரத்தக் கலப்புடைய உறவினர் பட்டியலை இரண்டாவது பாடலில் தருகிறார். 276ஆம் பாடலில் 'எந்தை எந்தாய்’ என்பவர்களோடு சேர்த்து, சுற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் இச்சொல்லால் குறிக்கப்பெறுபவர். ஏனைய இரத்த உறவுக்காரர்களையே என்பது பெற்றாம். 'பந்தம்’ என்ற சொல்லால், இவர்களுக்கும் அடிகளாருக்கும் இடையே’ யுள்ள இரத்த பந்தம் குறிக்கப்பெற்றது. இனி மற்றும் எல்லாம் என்று கூறியதால் துரத்துச் சுற்றத்தார் பற்றிய பந்தம், உலகப் பொருள்கள்பற்றிய பந்தம் ஆகிய அனைத்தையும் குறிக்கின்றார். திருப்பூவல்லியின் முதற்பாடலில், துறந்தொழிந்தேன் என்று கூறியவர், இரண்டாம் பாடலில் இந்தப் 'பந்தங்களை அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்’ என்கிறார். அப்படியானால் துறந்தொழிந்தேன் என்று தன்வினையால் கூறுவதற்கும், அறுத்த பாண்டிப்பிரான் என்று பிறவினையால் கூறுவதற்கும் இடையே ஏதோ ஒரு வேறுபாட்டைக் கருதுகிறார் அடிகளார் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. அதாவது, இரத்த சம்பந்தமுடைய உறவினரைத் தவிர்ந்த ஏனைய சுற்றத்தை, அவராலேயே துறக்க முடிந்தது. எனவே, அதனை துணையான சுற்றமென்றார்.