பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஆனால், இரத்த சம்பந்தமுடைய உறவை ஒருவர் தம் முயற்சியால் துறப்பது கடினம். முற்றும் துறந்த பட்டினத்துப் பிள்ளையும், ஆதிசங்கரரும்கூடத் தாய் உறவை இறுதிவரை துண்டித்துக்கொள்ளவில்லை என்பதை இங்குச் சிந்திக்கலாம். அதேபோல உடம்பு என்ற ஒன்று இருக்கின்றவரையில் அதன் தொடர்புடைய 岛.Q}ó பந்தத்தையும் எளிதாகப் போக்கிவிட முடியாது ஆதலாலும், அவன் அருளே துணையாகக் கொண்டு அறுக்க வேண்டும் ஆதலாலும் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்’ என்றார். திருப்பெருந்துறை நாடகத்தில் மிகமிக இன்றியமை யாததும், தம்முடைய வாழ்வையே வழிதிருப்பியதும், தம் பிறப்பை அறுப்பதற்குக் காரணமாக அமைந்ததும், இந்த உலகத்தில் இருக்கும்போதேகூட இந்த உடம்பில் அமுத தாரைகளை எற்புத் துளைதொறும் ஏற்றியதும் ஆகிய அனைத்தும் நடைபெறுவதற்குக் காரணமாய் அமைந்தது ஒரேயொரு செயல்தான் என்பது அடிகளாரின் முடிவான கருத்தாகும். அந்த ஒரு செயல், குருநாதர் தம் திருவடியை அடிகளார் திருமுடிமேல் வைத்ததாகும். இதுபற்றி முன்னரும் பல இடங்களில் பாடியுள்ளாரேனும் இந்தப் பூவல்லிப் பகுதியில் நான்கு இடங்களில் கூறுகின்றார். ഷ|ഒിബ!, இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே (திருவாச. 275) பாதமலர் என் ஆகம் துன்னவைத்த பெரியோன் (திருவாச 283) சீரார் திருவடி என்தலைமேல் வைத்தபிரான் (திருவாச 284)