பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பொருளைத் தருமாறு செய்கிறார். ஆனாலும் முப்புரங் களும் எரிந்தன. அதில் உள்ளவர்கள் உளைந்தனர் என்று கூறினார். திரிபுரக் கதை, தக்கன் கதை, இராவணன் கதை ஆகிய கதைகளை ஒரு வரிசைப்படுத்துவதன் மூலம், சிவபெருமானுடைய பேராற்றலைக் கூறிக்கொண்டு வருகிறார் அடிகளார். பிரபஞ்ச காரணன் என்பதையும், கருணையே வடிவானவன் என்பதையும் நாயிற் கடைப்பட்ட தம் போன்றவர்களுக்கும் 'தாயிற்சிறந்த தயாவான தத்துவன்' என்பதையும் இதுவரை பலப்பல பாடல்களில் கூறிக் கொண்டுவந்த அடிகளார், இப்பொழுது அப்பெருமானுடைய வீரச் செயல்களை வரிசைப்படுத்திக் கூறினார். அழிக்கும்பொழுதுகூட அவனுடைய கருணை தாராதரம் பார்க்கின்றது என்பதை உய்யவல்லார் ஒரு மூவரைக் காவல்கொண்டு’ (திருவாச:298 என்பதால் விளக்கினார். தக்கன் வேள்வியில் பங்குகொண்டோர், அவ்வேள்வி யில் சிவன் ஒதுக்கப்பட்டான் என்று தெரிந்திருந்தும் தாங்கள் அழைக்கப்பட்டதால் தருக்குக் கொண்டனர். அதுவுமன்றித் தக்கன் ஆணவத்தோடு சிவனை இகழ்ந்த போது வாய்மூடி இருந்து, அதற்கு உடந்தை ஆயினர். ஆதலின், கருனைக்கு இடங்கொடாது தண்டித்தான் என்றார். முதல் பதினாறு பாடல்களிலும் (29.5-310) கொடுமை நிறைந்த வீரச்செயல்களைக் கூறியமையின் படிப்பவர் மனத்தில், சிவபெருமான் கடுமையானவன் என்ற எண்ணம் தோன்ற இடமுண்டல்லவா? அதனைப் போக்கவே 31 ஆம் பாடலில் உடமன்யு முனிவன் கதையைக் கூறினார்.