பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நாடியழைக்கும் இயல்புடையது; ஆதலின் வரக் கூவாய்' என்று எட்டுப் பாடல்களில் பாடுகிறார். எஞ்சியுள்ள 340, 353 ஆகிய இரண்டு பாடல்களில்கூட நாடனைக் கூவாய்' 'நாதனைக் கூவாய்' என்றும் வருகின்ற தொடர்கள் "வரக்கூவாய்’ என்ற பொருளிலேயே அமைந்துள்ளன. தனக்குத் துணையாகவும் ஒருவன் வருவான் என்றால் அவனுடைய அங்க அடையாளங்களைக் குயில் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அவற்றைத் தெரிந்து கொண்டாலும் ஏதோ பக்கத்து மரக்கிளையில் அவன் உள்ளான் என்று குயில் நினைத்துவிடக்கூடாது என்ற கருத்தில் அவனுடைய அருமை பெருமைகளைப் பின்வரும் தொடர்களில் விரிவாகக் கூறுகின்றார். - 'நீ அழைக்கவேண்டிய துணைவனுடைய பாதம் இரண்டும் பாதாளத்தின் கீழ்ச் சென்று நிற்கின்றன. அவனுடைய திருமுடி, வாக்கு, மனம், கற்பனை ஆகியவற்றைக் கடந்து அப்பால் நிற்கின்றது. அதுமட்டுமன்றி ‘முந்தும் நடுவும் முடியும் ஆகிய மூவர் அறியாச் சிந்துரச் சேவடியான் (திருவாச 352) அவன், மேலும் 'மாலொடு நான்முகன் தேடி, ஒவி அவர் உன்னி நிற்ப, ஒண்கழல் விண்பிளந்து ஓங்கி, மேவி அன்று அண்டங் கடந்து விரி சுடராய் நின்ற மெய்யன் (திருவாச. 355) அவனாவான்’ துணையாக வரக்கூடியவனின் அடையாளங்களை அடிகளார் கூறியதைக் கேட்ட குயிலுக்கு மயக்கமே வந்துவிட்டது. அவனெங்கே? நாமெங்கே? இத்தகைய பெருமையுடைய ஒருவன் நமக்குத் துணையாக வருவான் என்று எண்ணுவது பேதைமை என்று எண்ணி, மனம் நொந்து ஓடிவந்து அமர்ந்திருக்கும் குயிலையே நோக்கி, அடிகளார் இதோ பேசுகிறார்: தேன் பழச் சோலை பயிலும் சிறுகுயிலே மனம் முறிந்துவிடாதே. இப்பொழுது நான் சொல்லப்போவதைக் கவனமாகக் கேள். இத்துணைப்