பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழாப் பத்து 91 அடைக்கலம்’, 'அடியரில் கூட்டிய அதிசயம்", ‘ஆசைப்பட்டேன்' எனவரும் பகுதிகளின் தலைப்பை மட்டும் வைத்துப் பார்த்தால்கூட இவற்றின் ஆழத்தில் ஏதோ ஒரு குழப்பம் இருப்பதாகத் தோன்றுகிறது. திடீரென்று ‘புல்லிப் புணர்வது என்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே என வரும் பகுதி மறுபடியும் அவரின் ஒரு குறிப்பிட்ட ஆசையை வெளிப்படுத்துகிறது. அடியார்களுடன் கூடவேண்டும் என்பது சரி, திருவடியில் அடைக்கலம் அடையவேண்டும் என்று நினைப்பது சரி, அத்திருவடியோடு இணைந்திருக்க ஆசைப்படுவது சரி. இவையெல்லாம் ஆண்டான்அடிமைத் திறத்தில், அடிமைப்பட்டவர் விரும்புகின்ற நியாயமான விருப்பங்களாகும். இவற்றிற்குத் தடையாக இருப்பது உடம்பு என்ற நினைப்பு வந்தவுடன் செத்திடப் பணியாய்' என்று வேண்டுவதும் சரி. இவற்றையெல்லாம் விட்டுவிட்டுப் பல படிகள் கடந்து பொல்லா மணியைப் புல்லிப் புணரவேண்டும்’ என்று பாடுவது அவரது உள்ளத்தின் வளர்ச்சியை ஒருவாறு தெரிவிக்கின்றது புல்லிப் புணர்வது என்று சொல்லும்போது அடிமைத்திறம் மறைந்துவிடுதலைக் காண்கின்றோம். இதனை அடுத்து வருவது வாழாப் ப்த்தாகும். 'செத்திடப் பணியாய்” என்பதற்கும் ‘வாழ்கிலேன் கண்டாய்' என்பதற்கும் பொருளில் அதிக வேறுபாடில்லை. தாமாகச் சாவைத் தேடிக்கொள்வதற்கு உரிமையில்லை. ஆதலால் செத்திடப் பணியாய் என்றார். ஆனால், இவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்க்கை நீடிக்கின்றது. அதனை இவரால் ஒன்றும் செய்துகொள்ள முடியவில்லை. தலைவனே முன்னின்று இதற்கொரு