பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வழிசெய்தா லொழிய, சற்றும் விருப்பமில்லாத இந்த வாழ்க்கையை இவர் கொண்டுசெலுத்தித்தான் ஆகவேண்டும். சற்றும் விரும்பத்தகாத ஒன்று அடிகளாரைப் பற்றிக் கொண்டு விடமாட்டேன் என்ற உறுதியுடன் நிற்கின்றது. அது அவரைவிட்டுக் கழல வேண்டுமேயானால் அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. இந்த வாழ்வை எவன் கொடுத்தானோ அவனே அதனைக் கழற்றிக்கொள்ள வேண்டும். ஆனால், அவனோ கழற்றுவதாக இல்லை. இந்த வாழ்க்கையிலேயே ஒரு மாபெரும் இறையனுபவத்தைக் கொடுத்துவிட்டு, முன்னறிவுப்பு இன்றி அந்த அனுபவத்தைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டான். அவன் ஆண்டது எவ்வளவு அதிசயமோ, அவ்வளவு அதிசயமானது அவன் பிடுங்கிக்கொண்டு மறைந்தது. இந்த நிலையில், எல்லையற்ற, தாங்கொணாத, போக்கிக்கொள்ள முடியாத, துயரத்தில் ஆழ்ந்த அடிகளார், வாழாப் பத்தைப் பாடுகிறார். - இந்த ஆழ்ந்த கருத்தை நன்கு சிந்தித்துப் பார்த்தால், இப்பதிகத்திற்குப் பழையவர்கள் கொடுத்த 'முத்தி உபாயம் என்ற உட்தலைப்பு, வழக்கம்போல் சற்றும் பொருந்தமில்லாமல் அமைந்துள்ளது என்பது தெரிகிறது. 448. பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்