பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழாப் பத்து 95 அருளிலையானால் ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்து உரைக்கேன்’ என்று பாடியருள்கிறார். 'அதனால், இந்த வார்கடல் உலகில் வாழப் பிடிக்கவில்லை. உன் திருவடிக்கண் வருக என்று அருள்புரிவாயாக’ என்கிறார். 449. வம்பனேன்தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும் செம் பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே எம்பெருமானே என்னை ஆள்வானே என்னை நீ கூவிக்கொண்டருளே 2 'வம்பனேன்’ என்ற சொல் வீணனேன் என்ற பொருளைத் தரும். அடுத்து இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும் செம்பெருமானே’ என்ற தொடர் அழகான ஒரு கருத்தை உட்கொண்டுள்ளது. நான்முகன், திருமால் என்ற இருவர் அறிவிற்கும் அகப்படாமல் நின்றவன் என்று சொல்வது சரி. ஆனால், அறிவை நம்பாமல் உணர்வினால் அவனைக் காணவேண்டும், அல்லது உணரவேண்டும் என்று அவர்கள் தொடங்கியிருந்தால் கண்டிருக்கலாமே! உணர்வு என்பது பக்தியாக மலர்ந்து, அந்த வலையினுள் அவனை அகப்படுத்திக்கொண்டிருக்கலாமே! அது ஏன் முடியாமல் போயிற்று? அதற்கு விடை கூறுகிறார் அடிகளார். இந்த இருவர் எதிரே தீத் தூணாய் நின்றவன் அடிமுடி காணப்படாத அளவிற்கு நீண்டு நின்றுவிட்டான். இவர்கள் உணர்வு தன் பணியைச் செய்திருப்பின்