பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அவர்கள் பணிந்து சென்று அவனைத் தம்வசப்படுத்தி யிருப்பார்கள். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்கிறார். இருவர்க்கும் உணர்வு இறந்து என்றதால் அவர்கள் பயன்படுத்தியது உணர்வு அன்று; அறிவே என்கிறார் அடிகளார். அடிகளார் இங்குப் பயன்படுத்தியது உணர்வு என்ற சொல்லே ஆயினும், அது அறிவு என்று பொருளில்தான் பயன்படுத்தப்பெற்றுள்ளது. அறிவினால் அறியப் படாததும், அறிவைக் கடந்து நிற்பதும் <!}6যT அப்பொருள் இவர்களுக்குக் கட்டுப்படாததில் வியப்பொன்றுமில்லை. உணர்வு என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. எதிரேயுள்ள மிகப் பெரிய மரத்தைக்கூட அந்த முகம் பார்க்கும் கண்ணாடியுள் கண்டுவிடலாம். புல் நுனியின்மேல் உள்ள பனித்துளியில் எதிரேயுள்ள பொருள்கள் அனைத்தும் காணப்படும். இவர்கள் இருவரும் உணர்வைப் பயன்படுத்தியிருப்பார்களே யானால் அந்த நெடிய தீத் துரண் இவர்கள் உணர்வுக்குள் அகப்பட்டிருக்கும். ஆனால், இவர்கள் அறிவைப் பயன்படுத்தினார்கள் என்கிறார் அடிகளார். உணர்வு' என்ற சொல்லையடுத்து இறந்து என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் அந்த உணர்விற்குள் (அறிவிற்குள்) தீத் துரண் கட்டுப்படவில்லை என்பதை அறிவிக்கின்றார். 450. பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே ஊடுவது உன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே 3