பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வெளிப்பட்டு நின்று, உறுதியாக (திண்ணமே, ஆண்டு கொண்டாய். அந்த நிலையில், என் பொறி புலன்கள் ஒரேயடியாக நின்கனே வந்திருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. அதாவது, 'எண்ணமே, உடல், வாய், மூக்கொடு, செவி, கண் என்று இவை நின்கனே' வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமையால் மண்ணின்மேல் வாழ விரும்பவில்லை என்கிறார். 453. பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் செஞ்சவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே 6 செஞ்சவே-செம்மையாக ஒருவர் செய்த உபகாரத்தை மறப்பது என்பது நன்றி கொன்ற செயலாகும். அந்தப் பாவத்திற்குக் கழுவாயே இல்லை என்ற இக்கருத்தை (திருப்பெருந்துறையில் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன்’ ஆதலால், உலகிடை வாழ விரும்பவில்லை என்கிறார். இப்பெரும் பாவத்திலிருந்து விடுபட வழியில்லை. ஆதலால், நன்றியில்லாத நாய் போன்றவனாகிய நான் அஞ்சினேன்’ என்கிறார். - 454. பருதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் திரு உயர் கோலச் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே