பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்திலாப் பத்து 3 குருநாதர் ஆணையின்படி கோலமார்தரு பொது வினில் வந்தாயிற்று, பராஅமுது ஆகிய திருவாசகத்தையும் குருநாதர் ஆணைப்படி பெரும்பகுதி பாடி ஆயிற்று. அப்படியிருந்தும் அடியார் கூட்டத்தோடு செல்ல முடியவில்லை என்றால், அதற்கு இந்தப் பருவுடல்தான் காரணம் என்று நினைத்த அடிகளார், செத்திடப் பணியாய்’ என்று வேண்டுகிறார். அடியார் கூட்டத்தில் இருக்க இயலாமைக்குக் காரணம் இந்த உடல்தான் என்றால், அதுவாகப் போகின்றவரையில் காத்திராமல் அதைப் போக்கிக் கொண்டிருக்கலாமே! அடிகளார் அவ்வாறு செய்யாமைக்கு ஒரு காரணமுண்டு. ஒரு நாட்டின் அமைச்சராக இருந்தவருக்கு எந்த உயிரையும் உடலிலிருந்து பிரிப்பது பெரிய காரிய மன்று. இவ்வளவு நொந்துபோகின்ற இவர் எளிதாகத் தம்முடைய உடலைப் போக்கிக் கொண்டிருக்கலாமே! இந்த எண்ணம் அடிகளார் மனத்திலும் பலமுறை தோன்றியிருக்கும். அந்த எண்ணத்தைத் தடைசெய்தது மற்றொரு பெரிய சிந்தனை. அதாவது, இந்த உடம்பு தமக்குச் சொந்தமன்று என்பதை அடிகளார் நன்கு அறிந்திருந்தார். எந்த விநாடி குருநாதர் திருவடி தீட்சை செய்தாரோ, அந்த விநாடியே இந்த உடல் பொருள் ஆவி அனைத்தும் குருநாதருக்குச் சொந்தமாகி விட்டன. அதையே 'அன்றே என்தன் ஆவியும் உடலும் (திருவாச 50.2 என்ற பாடலில் அடிகளார் குறிப்பிடுகின்றார். தம்முடைய முன்னேற்றத்திற்கு இந்த உடம்பு எவ்வளவு தடையாக இருப்பினும், அது குருநாதரின் சொத்து ஆதலால், அந்த உடம்பைப் போக்கக் குருநாதரின் உதவியையே நாடுகின்றார்.