பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் பத்து 11 திருப்பெருந்துறையில் உள்ள அடியார்கள், தழலுருவாய் நின்ற வடிவை நோக்கி நீ வெளிப்பட்டு அருள்புரிய வேண்டும் என்று வேண்ட, அத்தழலிலிருந்து குருநாதர் வடிவாக வெளிப்பட்டு அருள்செய்தான் என்று இப்பாடலின் முதலிரண்டு அடிகளுக்குப் பொருள் கூறியுள்ளனர். இது ஒரு சிறிதும் பொருத்தமற்ற புராணக்கதையை நம்பி வலிந்து செய்யப்பட்ட பொருளாகும். திருவாசக அடிப்படையில் அடிகளார் வரலாற்றைச் சிந்தித்தால், திருப்பெருந்துறையில் நெருப்பொன்று தோன்றியதாக நினைக்க இடமேயில்லை. எனவே, அவ்வாறு பொருள் கூறுவது பொருந்தாமை அறிக. நான்முகனும் மாலும் ஆணவத்தால் அடிமுடி தேட முயன்று முடியாதபோது, அந்தத் தழல் உருவை நோக்கி, ‘ஐயனே! வெளிப்பட்டு எங்களுக்கு அருள் புரிவாயாக' என்று வேண்ட அவர்களுக்கு அருள்புரிந்தான் என்பதே நேரிய பொருளாகும். அதாவது கமல நான்முகனும், கார்முகில் நிறத்துக் கண்ணனும், நண்ணுதற்கு அரிய விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன, வியன் தழல் இருந்து வெளிப்பட்ட எந்தாய்' என்ற முறையில் பொருள் காண்க. 452. துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலைக்கண்கள் தோய் சுவடு பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளயே 5 இப்பாடலின் பொருள் வெளிப்படை