பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் பத்து 113 மேருவை வில்லாக வளைத்துக் கையிற்கொண்டு திரிபுரத்தை அழித்தார், இயமனைக் காலால் உதைத்தார் என்ற இந்த இரண்டு செயல்களும் எந்த அடிப்படையில் நடைபெற்றன? திரிபுராதிகள், ஆணவம் காரணமாகப் பிறருக்குத் தீங்கிழைத்தனர்; அழிந்தனர். இயமன் கடமையைச் செய்ய முற்பட்டானேனும், இடம் அறிந்து கடமையைச் செய்யவேண்டும் என்று நினையாமல், ஆணவம் காரணமாகப் பாசக் கயிற்றை வீசி அதனால் தண்டனை அடைந்தான். - இறைவனுடைய திருக்கரமும் திருவடியும் ஆணவத்தை அழிக்கவே எழுந்தன. இது மறக்கருணையின் பாற்படும். திரிபுரத்தை எரித்தாலும் தன்னையே நம்பியிருந்த மூவரை அழிவினின்றும் காத்தான். காலனைக் காலால் உதைத்தாலும் அவனிடம் சிக்கவேண்டிய மார்க்கண்டனை, தன்பால் சரணடைந்தான் என்பதால் காத்தருளினான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் செய்தவனுக்கு நினைவூட்டிவிட்டு, அவனைச் சரணடைந்த தம்மை இப்போது அவன் காக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 465 முத்தனே முதல்வா முக்கண முனிவா மொட்டு அறா மலர் பறித்து இறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பர கதி கொடுத்து அருள்செய்யும் சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே - 8 சித்தன்-பிறர் வியக்கும் காரியம் செய்பவன்.