பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மலர் பறித்து இறைஞ்சுவார்க்கும் பரகதி கொடுப்பவனே! அத்தகைய புறப் பூசைகளில் ஈடுபடாதிருக்கும் எனக்கும் அந்த அருளைத் தரவேண்டும்' என்று கேட்பதன் காரணம், அவன் எதனையும் செய்யும் ஆற்றலுடைய சித்தன் என்பதால் என்க. 466. மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே 9 'மருளனேன் மனத்தை நோக்கி மயக்கு அற இம்மையோடு மறுமையும் கெடுத்த பொருளனே எனக் கொண்டுகட்டுச் செய்க. மயக்கம் நிறைந்த என் மனத்தை ஆழமாகவும், குறிப்பிட்ட கருத்தோடும் குருநாதர் நோக்கியமையால் இப்பிறப்பில் வினை சேரா வாழ்க்கை வாழ முடிந்தது. வினையின்மையின் மறுபிறப்பு என்பது சொல்லாமலே ஒழிந்தது என்க. பொருளன் என்பது மூலப்பொருள் வடிவானவன் என்ற பொருளைத் தரும். 467. திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடை எம்பிரான் என்று என்று அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல் அதனுளே நின்று பொருந்த வா கயிலை புகு நெறி இதுகாண் போதராய் என்று அருளாயே 10