பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கோலத்தை அப்படியே மனத்துட் பதித்துக்கொண்டு வாழ்கின்றார் என்பது பெற்றாம். 'அருந்தவா என்றதால் குருந்தமரத்தடியில் இருந்த குருநாதரின் தவக் கோலத்தையே மறுபடியும் நினைக்கின்றார் என்பது தெரிகிறது. 'அலைகடல் அதனுளே நின்று' என்றதால் பிறவியாகிய துயரக்கடலின் உள்ளேயிருந்து அவதியுறும் என்னைப் பார்த்துக் கயிலை புகுநெறி இதுகாண்’ என்று வழிகாட்டி, உடனே புறப்படுவாயாக போதராய்) என்று நீ அருள்செய்ய வேண்டும் என்கிறார்.