பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுக்குன்றப் பதிகம் 123 அடிகளாருக்குக் கணக்கிலாக் கோலத்தைக் கழுக்குன்றில் குருநாதர் காட்டினார்’ என்க. 'உணக்கு இலாதது ஓர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின்' என்பது, உலர்த்தப்படாத (ஈரமான) ஒரு விதையானது மறுபடியும் முளைக்கின்ற திறனை இழந்து நிற்பதுபோல், என்னுடைய (ஆகாமிய) வினை இறையனுபவத்தில் நனைந்தே இருத்தலின் இனியொரு பிறவியை விளைக்கும் வித்து ஆமாறு இல்லை என்கிறார். மானிட உடலோடு உலவிவரும் அடிகளார், செயல்கள் செய்யாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பயன் உண்டாதலின் ஆகாமியம் வந்தே தீரும். இதுவும் தம்மை ஒன்றும் செய்யவில்லை. முளைக்க முடியாத ஈரவிதை போல இது இருந்துவிட்டது என்று சொல்லுகிறாரே, அது எவ்வாறு பொருந்தும் என்ற வினாவிற்கு ஏனைய இடங்களில் விடை கூறியுள்ளார். 'சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்' (திருவாச:320) என்றும் 'நான் கெட்டவாபாடித் தெள்ளேனம் கொட்டாமோ (திருவாச:252) என்றும் வரும் தொடர்களால் இதற்கு விடை கூறுகிறார். செய்ததெல்லாம் தவமாய்விட்ட பிறகு ஆகாமிய விதை அழிகிறது. நான் கெட்ட நிலையில் செய்யப்படும் செயலுக்குச் செய்தவன் பொறுப்பாவதில்லை என்பதும் தெரிகிறது. 469. பிட்டு நேர் பட மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே சட்டம் நேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன் சிட்டனே சிவலோகனே சிறு - நாயினும் கடை ஆய வெம் கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து - காட்டினாய் கழுக்குன்றிலே 2