பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்று சொல்பவர்போலத் திருக்கழுக்குன்றிலே வந்து குருநாதர்தம் கோலத்தைக் காட்டினார் என்கிறார். 471. பூண் ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்தொறும் போற்றவும் நாண் ஒனதது ஒர் நாணம் எய்தி நடுக் கடலுள் அழுந்தி நான் பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும் காண் ஒனாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே 4 சென்ற பாடலைப் போன்று இப்பாடலும் எளிதாகப் பொருள் கொள்ள முடியாதபடி சொற்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. பூணொணாததோர் அன்பு, நாணொணாததோர் நாணம், பேணொணாத பெருந்துறைத் தோணி என்ற மூன்று தொடர்களும் தம் அளவிற்குப் பொருந்தாத என்ற பொருளையே தந்துநிற்கின்றன. பூணொணாததோர் அன்பு என்பது தம்முடைய நிலைமைக்கு ஏற்றுக்கொண்டு பயன்படுத்த முடியாத அன்பு என்பதாம். நாணொணாதோர் நாணம் என்பது சராசரி மனிதனுக்கு ஏற்படுகின்ற நாணத்தைக் காட்டிலும் தாங்க முடியாத பெருநாணம் என்பதாம். பேனொணாத பெருந்துறைத் தோணி என்பது ஒரு தனிமனிதன் சாதாரணமாகத் தன்னுடைய முயற்சியால்மட்டும் வைத்துக் காப்பாற்ற முடியாத பெருந்தோணி என்ற பொருளைத் தந்துநிற்கின்றது. . “நின் திருவடிக்கண் செலுத்த வேண்டிய அன்பின் எல்லை எது என்று அறிந்திருந்தும் அத்தகைய அன்பை என்னுள் தாங்கி உன்பால் செலுத்தமுடியாமையால்