பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இறைவனே அவ்வடிவை ஏற்றுக்கொண்டபொழுது அந்தப் பன்றியின் உடம்பு மேனி) அழகு கோலம்) நிறைந்ததாய் அமைந்துவிட்டது. இது மதுரையில் தாயை இழந்த பன்றிக் குட்டிகளுக்குச் சொக்கன் பால் ஊட்டத் தானே தாய்ப் பன்றி வடிவுடன் வந்து அருள்செய்தான் என்ற திருவிளையாடல் கதையை அடிப்படையாகக் கொண்டது. குணமாம் பெருந்துறைக் கொண்டலே என்பது இறைவன் உயிர்களுக்குக் கருணையை வாரி வழங்கும் கொண்டல் என்ற பொருளைத் தரும். அக் கொண்டலை இவர் கண்டது திருப்பெருந்துறையில் ஆதலின் பெருந்துறைக் கொண்டல் என்றார். சாதாரணக் கொண்டல் மழையை மட்டும் அளிக்கும். ஆனால், இப்பெருந்துறைக் கொண்டல், அருளையே வடிவாகக் கொண்டிருத்தலின் அதனையே வழங்கிற்று என்ற கருத்துப்பட குணமாம் கொண்டலே' எனறாா. சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி என்பது எவ்வித நற்பண்பும் (சீலமும்) இல்லாத என் சிந்தையினிடத்துத் திருவடிகள் இரண்டையும் தங்குமாறு வைத்த முடிமணி போன்றவனே என்ற பொருளைத் தரும். ஞாலமே கரியாக என்பது அடுத்துள்ள தொடராகும். யான் உன்னையன்றிப் பிறிதொன்றையும் விரும்பாமல் உன் திருவடியையே நச்சினேன் என்பதற்கு இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் சான்றாக (கரியாக உள்ளன என்று கொள்க. 'நச்சி நச்சிட என்பது ஓயாது மீட்டும் மீட்டும் என் விருப்பத்தை தெரிவித்து அழைக்க’ என்ற பொருளைத் தருவதாகும். அவனை அவ்வாறு அழைக்கத் தொடங்கினால் அவன் வந்தே தீருவான் என்ற கருத்தை அடிகளாருக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவராகிய நாவரசர் பெருமான் சிவன் எனும் நாமம் (திருமுறை 4:12-9) என்று தொடங்கும் பாடலில் 'நாமம் பிடித்துத் திரிந்து அழைத்தால் இவன் எனைப்